ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு

ஆத்தூர், மே 25: ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் பிடிக்க நீண்ட ேநரம் மக்கள் காத்திருக்க ேவண்டிய நிலை உள்ளது.
Advertising
Advertising

மேலும், அத்தியாவசிய ேதவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சீரான குடிநீர் விநியோகம் கேட்டு, அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் காவிரி குடிநீர் 15 தினங்களுக்கு ஒருமுறை தான் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் போதுமானதாக இல்லை. மேலும், ஆழ்துளை கிணற்று நீரும் இப்பகுதியில் கிடைப்பதில்லை. இதனால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் தட்டுப்பாட்ைட போக்க, ஆழ்துளை கிணற்று நீரை விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: