சேலம் நாடாளுமன்ற ெதாகுதியில் 3வது இடம்பிடித்த மக்கள் நீதி மய்யம்

சேலம், மே 25: சேலம் தொகுதியில் அமமுகவை பின்னுக்கு தள்ளி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 3ம் இடம் பிடித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில், 12,49,1755 மின்னணு வாக்குகள் பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே, திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலையில் இருந்து வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ் சரவணனை விட சராசரியாக 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகமாக ெபற்றுவந்தார்.

Advertising
Advertising

தொடர்ந்து, 26 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்ைகயின் முடிவில், நள்ளிரவு 12.30 மணிக்கு திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். 6 சட்டமன்ற தொகுதியையும் சேர்த்து 6,06,302 வாக்குகளை எஸ்ஆர் பார்த்திபன் பெற்றார். அதற்கு அடுத்தபடியாக, அதிமுக சார்பில் போட்டியிட்ட கேஆர்எஸ் சரவணன் 4,59,376 வாக்குகளை பெற்று, 2ம் இடம் பிடித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபு மணிகண்டன் 58,662 வாக்குகளை பெற்று 3ம் இடத்தை ெபற்றார்.

அதேசமயம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் எஸ்கே செல்வம் 52,332 வாக்குகள் பெற்று 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர், அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பும் வகித்துள்ளார். மக்களின் தனிப்பட்ட செல்வாக்கு இருந்ததால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறைந்த வாக்குகளே பெற்றதால், அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளர். அதிகபட்சமாக அவரின் சொந்த தொகுதியான வீரபாண்டியில் மட்டும் 17,134 வாக்குகளை பெற்ற அவர், பிற தொகுதியில் 10 ஆயிரம் வாக்கினை கூட தொடவில்லை.

அதேசமயம் யாரும் எதிர்பாராத விதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரபு மணிகண்டன்   அமமுகவை காட்டிலும் 6,330 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இவற்றில் மாநகரில் உள்ள சேலம் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் மட்டும் 45,272 வாக்குகளை பெற்ற அவர், புறநகரில் உள்ள ஓமலூர், இடைப்பாடி மற்றும் வீரபாண்டியில் வெறும் 13,200 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதுதவிர 190 தபால் வாக்குகள் அவருக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: