ரூ.5.06 லட்சத்துக்கு கருப்பட்டி விற்பனை

அவிநாசி, மே 23: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், வாரந்தோறும் இங்கு தென்னை மற்றும் பனங்கருப்பட்டிகளை விவசாயிகள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டுவது வழக்கம். இதன்படி நேற்று  நடந்த ஏலத்தின் போது 2 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டியையும்,  2 ஆயிரம் கிலோ பனங்கருப்பட்டியையும் ஏலத்துக்கு உற்பத்தியாளர்கள் கொண்டு வந்திருந்தனர். தென்னங்கருப்பட்டி  கிலோ ஒன்றுக்கு ரூ.125.60 வீதம், ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்துக்கும், பனங்கருப்பட்டி கிலோ ஒன்றுக்கு ரூ. 127.50 வீதம் ரூ.2 லட்சத்து ஐம்பத்து ஐந்தாயிரத்துக்கும் ஏலம் போனது. ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 200 ஆகும். ஏலத்தை கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து மற்றும் மேலாளர் முருகானந்தம் ஆகியோர் நடத்தினர்.

Related Stories: