ஆத்தூர் நகருக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

ஆத்தூர், மே 23: ஆத்தூர் நகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது. ஆத்தூர் நகராட்சிக்கு முட்டல் ஏரியிலிருந்து, குடிநீர் கொண்டு வரப்படும் குழாய்கள் பழுதடைந்ததால், குடிநீர் வீணாகி வந்தது. இது குறித்த செய்தி, நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, உடனடியாக பொறியியல் பிரிவு அலுவலர்களை அழைத்து, குடிநீர் குழாய்களில் உள்ள உடைப்புகளை சீர் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று, முட்டல் பகுதியிலிருந்து ஆத்தூர் நகருக்கு குடிநீர் வழங்கும் குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: