முதுகுளத்தூர், கடலாடி,பரமக்குடி பகுதியில் வரத்து கால்வாய்களை பாழ்படுத்தும் கருவேல மரங்கள் l சிறு ஓடையான ஆறுகள் l மதகுகள் முற்றிலும் சேதம்

சாயல்குடி, மே 23: முதுகுளத்தூர், கடலாடி, பரமக்குடி பகுதியில் வரத்து கால்வாய்களை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. மழை காலம் துவங்கும் முன்பு அதிகாரிகள் அகற்ற முன்வரவேண் டும் என்று விவசாயிகள் அர Bசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக நடைபெறும் முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் முதுகுளத்தூர் ரெகுநாத காவிரி, கடலாடி மலட்டாறு, சாயல்குடி சங்கரதேவன் கால்வாய், கூத்தன் கால்வாய், கஞ்சம்பட்டி ஓடை போன்றவை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் இதில் ஓடி வரும் தண்ணீரை கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் சேமித்து வைத்து, இப்பகுதியிலுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நீர் வழித்தடங்கள், நீராதாரங்கள் பல வருடங்களாக முறையாக தூர்வாரப்படாமல் கிடப்பதால், தற்போது சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்தது. மேலும் ஆற்று பகுதியில் தனியார்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்தல், தொடர்ந்து நடந்து வரும் மணல் கொள்ளை போன்ற காரணங்களால் தற்போது ஆறு, கால்வாய்கள் இருக்கும் தடம் தெரியாமல்

சிறு ஓடைகளாக மாறி வரு கிறது.ஆறுகளிலிருந்து பிரிந்து கண்மாய்களுக்கு செல்லும் கிளை கால்வாய்களும், கண்மாய்களிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள மடைகள், மதகுகள், சிறு பாலங்கள் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது.

இதுபோன்ற காரணங்களால் மழை காலங்களில், காட்டாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட, முறையான வழித்தடங்களின்றி, கண்மாய், குளங்கள் பெருகுவது கிடையாது. அவற்றை சேமித்து வைப்பதற்கும் ஆறுகளில் தடுப்பணைகள் இல்லாததால் மழை தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயம் நாளுக்குநாள் அழிவை நோக்கி செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர், எனவே வரும் காலங்களில் தண்ணீரை சேமிப்பதற்கு சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். நீர்நிலைகளை சீரமைத்து மராமத்து செய்யவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: