டீக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் பழைய குற்றவாளிகளின் பெயர்கள் சேகரிப்பு போலீசார் தீவிர விசாரணை

மே 23: வாலாஜாவில் டீக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் பழைய குற்றவாளிகளின் பெயர்களை போலீசார் சேகரித்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வாலாஜா சீனிவாசன் ெதருவை சேர்ந்தவர் கோட்டி என்ற கோடீஸ்வரன்(38). வாலாஜா அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவி. இந்நிலையில், கடந்த 20ம் தேதி நள்ளிரவு இவர்களுக்கு சொந்தமான மாட்டை சிலர் வேனில் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கோடீஸ்வரனும், அதே பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுரேசும் பைக்கில் வேனை விரட்டினர். அப்போது, கோடீஸ்வரன் மீது வேனை ஏற்றி அந்த கும்பல் தப்பியது. இதில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாடுகளை கடத்தி சென்ற வேனில் நம்பர் பிளேட் இல்லாததும், இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க டிஎஸ்பி கலைச்செல்வம் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி பதிவுகளில் வேன் வேகமாக செல்வது மட்டும் பதிவாகி உள்ளது. வேன் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றதால் காட்சிகள் சரிவர தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் பழைய குற்றவாளிகளின் பெயர் பட்டியல்களை சேகரித்து வருகின்றனர்.

Related Stories: