15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சேலம், மே 22: ேசலத்தில் சுகாதார அதிகாரிகள்நடத்தியசோதனையில், 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 20 கடைகளுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்வீட் ஸ்டால்கள், உணவகங்கள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில வாரங்களாக பிளாஸ்டிக் சோதனையில் தொய்வு ஏற்பட்டதால், மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்தது.  

இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக நடந்த சோதனையில் 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து நேற்றும் சேலம் மாநகர் பகுதிக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, அன்னதானப்பட்டி, குகை ஆகிய இடங்களில் சுகாதார அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த கடை உரிமையாளர்களுக்கு ₹6ஆயிரம் அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநகர் பகுதியில் இந்த சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: