ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு3

திண்டுக்கல், மே 22:  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது நினைவு தினம், தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்விற்கு மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ஜபருல்லா, அரபு முகமது முன்னிலை வகித்தனர்.

பொதுச் செயலாளர் தனிகாச்சலம் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது சித்திக், ரேணுகோபால், ஜோதி ராமலிங்கம், குப்புசாமி, சிந்தை சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைதி பேரணி நடத்தினர்.

பின்னர் நடந்த நிகழ்விற்கு கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா தலைமை வகிக்க, பொருளாளர் நிஜக்கண்ணன் முன்னிலை வகித்தார். செய்தி தொடர்பாளர் ஹைருல்லா வரவேற்றார். இதில் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் முருகன், சபிபுல்லா, சுமதி, அம்சவள்ளி, சுதா, யூஜின், கோதண்டராமன், ராஜமுகம்மது, அப்துல்ரகுமான் உள்பட பலர் பங்கேற்றனர்.

ராஜீவ்காந்தி படத்திற்கு மாலையணிவித்து அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். கொடைக்கானல் அண்ணா சிலையில் உள்ள காங்கிஸ் கட்சி அலுவலகம் அருகே ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தேசிய ஒற்றுமைக்காக உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இதில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பலர் கலந்து கொண்டனர். பழநியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

Related Stories: