ஒட்டன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம், மே 17: தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, துண்டுபிரசுரம் வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நகராட்சி அலுவலர்கள் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

இதனால் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடைபட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறு கடைகள், உணவகங்களில் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், டீ கப், உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் உள்ளது. உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சல் கொடுப்பதற்கு கேரிபைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: