பால் உற்பத்தியாளர் சங்க கூட்டம்

நீடாமங்கலம், மே 17: நீடாமங்கலத்தில் பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டக்குழு கூட்டம் அதன் மாவட்ட தலைவர் துரைச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ரெத்தினம் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்டபொருளாளர் ரெகுபதி நிதி அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க செயலாளர் கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டனர். மன்னார்குடி அருகில் உள்ள திருமக்கோட்டையில் ஜூன் முதல் வாரம் மாவட்ட மாநாடு நடத்துவது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: