குடந்தை, பேராவூரணியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்பகோணம், மே 17:  கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி கிராமத்தில் வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில் உலக டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளா் சங்கரன் தலைமை வகித்து டெங்கு மனிதன் போன்று வேடமிட்டு பாடல்கள் பாடி விழிப்புணா–்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், தற்போது கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் நாம் நம் வீட்டின் தேவைக்காக குடிநீரை பல்வேறு பாத்திரங்களில் சேமித்து வைக்கிறோம். பல்வேறு வேலைகளுக்காக நீரை சேமித்து வைக்கிறோம். அவ்வாறு சேமித்து வைக்கும் நீரில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் அமா்ந்து ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான முட்டையிடும். 7ம் நாள் முதிர்ந்த கொசுக்களாக மாறி காய்ச்சல் உள்ள ஒருவரை கடித்து மற்றவா–்களை கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது.

எனவே அனைவரும் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி பாதுகாக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை கண்டறியும் ரத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். சுகாதார ஆய்வாளர்கள் விஜயேந்திரன், வீரமணி, சிவக்குமார், செந்தில்குமார், சவுந்தர்ராஜன், கோமதி மற்றும் திருவலஞ்சுழி ஊராட்சி மன்ற செயலாளர் குமார் பங்கேற்றனர். ஊராட்சி உதவியாளா் ராஜேஷ் நன்றி கூறினார்.

பேராவூரணி: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, குறிச்சி, காலகம், பின்னவாசல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், டாக்டர்கள் ரஞ்சித், அறிவானந்தம், சேது, சரண்யா, நிஷானி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: