அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர படிப்பு மையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம் விண்ணப்பங்கள் விநியோகம்

பெரம்பலூர், மே 17:  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின்  பெரம்பலூர் படிப்பு மையத்தில், 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பப்  படிவங்கள் விற்பனை மற்றும் மாணவர் சேர்க்கைக்கான தொடக்க விழா நேற்றுகாலை  நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின்   பெரம்பலூர் படிப்பு மையத்தில், பிஏ, பி.எஸ்சி, பி.காம், பி.எல்.ஐ.எஸ், எல்.  எல்.பி, எம்ஏ, எம்.எஸ்.சி, எம்.காம், எம்பிஏ, எம்சிஏ, எல்.எல்.எம்,  எம்.எல்.ஐ.எஸ் மற் றும் அனைத்து பட்டயம் முதுநிலை பட்டயப்  பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் 2019- 2020ம் கல்விஆண்டிற்கான விண்ணப்ப படிவங்கள் விற்பனை மற்றும் மாண வர்  சேர்க்கைக்கான தொடக்கவிழா நேற்று காலை பெரம்பலூர் படிப்பு மைய த்தில்  நடைபெற்றது. பெரம்பலூர் படிப்பு மைய அலுவலர்கள்  குமார், நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். படிப்பு மைய பொறுப்பு  அலுவலர் காமராஜ் தலைமை வகித்தார். விழாவில்  ஓய்வு பெற்ற பெரம்பலூர்  நல்லாசிரியர் கோவிந்தன் கலந்துகொண்டு, 2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான  விண்ணப்பப் படிவங்கள் விற்பனை மற்றும் மாணவர் சேர்க்கை யை தொடங்கி வைத்துப்  பேசினார். படிப்புமைய அலுவலர்கள் ராஜா, சரவணன், மாலா, தமிழரசி  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: