குரும்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தேதி மாற்றம்

பெரம்பலூர், மே 17: நிர்வாக காரணங்களால் குரும்பலூர் அரசு கல்லூரியில் 20ம் தேதி நடக்கும் கவுன்சலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்து. வருகிற 30ம் தேதி கவுன்சலிங் துவங்குகிறது. பெரம்பலூர்- துறையூர் சாலையில் குரும்பலூர் பகுதியில் இயங்கி வந்த பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி 13 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கல்லூரியில் 7 கலைப்பிரிவு, 7 அறிவியல் பிரிவு என மொத்தம் 14 இளங்கலை பட்ட வகுப்பு, 6 முதுகலை பட்ட வகுப்பு, 8 பிஎச்டி பட்ட வகுப்புகள் உள்ளன. நடப்பாண்டு கல்லூரியில் உள்ள 14 இளநிலை பட்ட வகுப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 10ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் குரும்பலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் (பொ) முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள முசிறி அரசு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தெரிவித்திருப்பதாவது:

குரும்பலூர் அரசு கல்லூரியில் நடப்பாண்டு 14 இளநிலை பட்ட வகுப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 10ம் தேதியோடு முடிவடைந்தது. 660 மாணவர் சேர்க்கைக்கு 1,300 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வருகிற 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை அறிவியல், கலைப்பிரிவு பாடங்களுக்கு கவுன்சலிங் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கவுன்சலிங் நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற 30ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வேதியியல், இயற்பியல், உயிர் தொழில் நுட்பவியல், நுண்ணுயிரியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 1ம் தேதி பிஏ வரலாறு, பிகாம் வணிகவியல், பிபிஏ மேலாண்மையியல் பாடப்பிரிவுகளுக்கும், 3ம் தேதி பி.லிட் தமிழ், பிஏ ஆங்கிலம், சுற்றுலாவியல், சமூகப்பணி பாடப்பிரிவுகளுக்கும், 4ம் தேதி காலியாகவுள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. குறிப்பிட்டுள்ள தேதிகளில் வர இயலாதவர் தங்களுக்கான சேர்க்கையை பெற இயலாது. இவ்வாறு ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: