குழித்துறை பாலத்தில் வழிப்பறி

குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மார்த்தாண்டம் வெட்டுவெந்நியை அடுத்து மிக   பழமையான பாலம் ஒன்று உள்ளது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட   பழமையான பாலம் இது. என்எச் 47 தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் அனைத்து   வாகனங்களும் இந்த பழைய பாலம் வழியாகவே சென்று வந்தன. இந்த நிலையில்   ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தி வந்ததால் பழமையான பாலத்தின்   பில்லர்கள் சுமார் ஒன்றரை அடிவரை மண்ணில் புதைந்தன. இதனால் இப்பாலம்   பழுதடைந்து, வலுவிழந்து பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் ஆபத்தில் சிக்கும்   நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து  பழைய  பாலத்துக்கு அருகில் நில ஆர்ஜிதம் செய்து புதிய பாலம்   அமைக்கப்பட்டது. கடந்த 2007ல் பெல்லார்மின் எம்பியாக இருந்தபோது, தரைவழி   மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு புதிய பாலத்தை  திறந்து வைத்தார். தற்போது புதிய பாலம் வழியாக வாகனங்கள் இயங்கி வருகின்றன.  இந்த  புதிய பாலத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளும்   அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால் நாளடைவில் இவை பழுதடைந்து ஒவ்வொன்றாக ஒளியிழந்தன. தொடர்ந்து சரிசெய்வதும், பழுதடைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த பாலத்தில் உள்ள மின்விளக்குகள்   எரியவில்லை. இதனால் பாலமே இரவு நேரங்களில் இருளில் மூழ்கி விடுகிறது.   பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.  மின்விளக்குகள்  எரியாததை பயன்படுத்தி இரவு நேரங்களில் பாலம் வழியாக நடந்து  செல்லும்  பொதுமக்களிடம் வழிப்பறி உட்பட குற்றச்ெசயல்கள் நடைபெறுகிறது.  அதுபோல இருளான இடத்தில் அமர்ந்து சிலர் மது  அருந்துகின்றனர். இவர்கள்  போதையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம்,  பாலத்தில் உள்ள மின்விளக்குகளை  சீரமைக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.

Related Stories: