அரியலூர் நகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நெடுஞ்சாலைத்துறைக்கு எஸ்பி உத்தரவு

அரியலூர், மே 15: அரியலூர் நகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறா உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டுமென சாலைை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எஸ்பி ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிமென்ட் ஆலை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்பி சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், இங்குள்ள அனைத்து சிமென்ட் ஆலைகளும் தங்களது சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் முதலில் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ரோந்து வாகனத்தை அமைத்து லாரிகள் எந்த வேகத்தில் செல்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காதபட்சத்தில் டிரைவர்களின் உரிமத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சிமென்ட் ஆலைகள் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் எத்தனை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அதன் தரம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். சாலை அமைத்த பிறகு சாலையோரத்தில் மண் கொட்டி அணைக்க வேண்டும். திருச்சி- சிதம்பரம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை அகற்ற வேண்டும். அரியலூர் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கு காவல்துறை உறுதுணையாக இருக்கும் என்றார்.கூட்டத்தில் சிமென்ட் ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: