அமைச்சு பணியாளர்கள் சங்க கூட்டம்

கடலூர், மே 14: கடலூரில் தமிழ்நாடு கல்வித்துறை ஓய்வுபெற்ற அமைச்சு பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.  முன்னாள் பள்ளி கல்வி இயக்கக நேர்முக உதவியாளர் ராமலிங்கம், முன்னாள்  மாவட்ட டிஎன்ஜிஓ யூனியன் தலைவர் செல்வம் கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.  மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தன் வரவேற்றார். மாநில பொருளாளர் சிவானந்தம்  வரவு- செலவு அறிக்கையை படித்தார். ஓய்வு பெற்ற துணை இயக்குனர் சீனிவாசன்  சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மத்திய அரசு வழங்கியது போல் ஓய்வூதிய  பலன்கள் முழுமையாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9 ஆயிரம் வழங்க  வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது.  மருத்துவ காப்பீடு திட்டத்தில் இடர்பாடுகளை களைய  வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: