மாவட்டம் மாலையில் படியுங்கள் தெளிச்சத்தநல்லூர் மக்கள் புகார் கீழக்கரை கடைகளில் அதிரடி ஆய்வு

கீழக்கரை, மே 14: கீழக்கரை நகராட்சியில் உள்ள கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலால், நேற்று நகராட்சி கமிஷனர் தனலெட்சுமி தலைமையில் நகரில் முக்கிய கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சரவணன், கீழக்கரை வருவாய்த்துறை ஆய்வாளர் சாரதா, நகராட்சி இளநிலை உதவியாளர் காத்திகேஸ்வரன் மற்றும் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் மனோகரன், சக்திவேல் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் கீழக்கரையில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீக் கப்புகள், குழந்தைகளுக்கு கேன்சரை ஏற்படுத்தும் கலாவதியான மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தனலெட்சுமி கூறுகையில், ‘‘அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்துள்ளோம். இந்த ஆய்வு மேலும் தொடரும். இனிமேல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும்’’என்றார்.

Related Stories: