இதெல்லாம் ‘ஓவருங்க’ குமுறிய மதுரை மக்கள்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் 2 நாட்கள் முகாமிட்டு பிரசாரம் செய்தார். பிரசாரம் முடித்து இரவு திருப்பரங்குன்றத்தில் இருந்து அவர் தங்கியுள்ள அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு நள்ளிரவு புறப்படத்தயாரானார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவில் குவிக்கப்பட்டனர். இரவு 11.30 மணியிலிருந்து ரோட்டில் ெசல்ல எந்த வாகனத்தையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

திருப்பரங்குன்றத்திற்கு முன்பாகவே தென் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மதுரையில் க்ரைம் பிராஞ்சில் பழங்காநத்தம் நோக்கி செல்ல இருந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நள்ளிரவு 12.30 மணியளவில் முதல்வர் வாகனங்கள் கடந்து ஓட்டல் நோக்கி சென்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருபுறங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன.

வேலை முடிந்து மற்றும் பல்வேறு அலுவல் முடிந்து நிம்மதியாக வீட்டிற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் முதல்வர் பழனிசாமி, பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்து விட்டார்; ஜெயலலிதாவிற்கு கூட போலீசார் இப்படி செய்ததில்லை என காத்திருந்தவர்கள் புலம்பினர்.

Related Stories: