திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்: 17ம் தேதி திருத்தேர்

திருவாடானை, மே 10:  திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திருவாடானையில் பாண்டி ஸ்தலம் 14 சிவ தலத்தில் எட்டாவது தலமாக உள்ளது ஆதிரெத்தினேஸ்வரர் உடனாய சினேகவல்லி அம்மன் கோயில். இக்கோயிலின் வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் .இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் காலை 9.30 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று பல்லக்கிலும், 11ம் தேதி பூத வாகனத்திலும், 12ம் தேதி கைலாச வாகனத்திலும் 13ம் தேதி யானை வாகனத்திலும், 14ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 15ம் தேதி இந்திர விமானத்திலும், 16ம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவின் சிறப்பு நிகழ்வாக 17ம் தேதி தேரோட்டம் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 18ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Related Stories: