ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை வேண்டி வருண ஜெபம்

ராமநாதபுரம், மே 8: ராமநாதபுரம் அருகே உத்திரகோச மங்கை அருள்மிகு மங்களநாதர் கோயிலில் குருக்கள் கணேசன், ரவி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் மழை வேண்டி வருணஜெபம், யாகபூஜைகள் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். போதிய அளவு மழை பெய்யாததால் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயம் இல்லை. தண்ணீர் இல்லாத நிலையில் மக்கள் கஷ்டத்தை போக்க மழை வேண்டி வருணஜெபம், யாக பூஜைகள் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள நந்திக்கு தொட்டில் கட்டி தண்ணீர் நிரப்பி வருண ஜெபம், நடத்தப்பட்டது. தொடர்ந்து ஹோமம் வளர்த்து பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன், வீரசேகரன், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: