அங்கன்வாடி மையத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து சென்ற சத்துணவு மாவு மூட்டைகள் மீட்பு அமைப்பாளர் மீது புகார்

செந்துறை, மே 8: செந்துறை அருகே அங்கன்வாடி மையத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து சென்ற சத்துணவு மாவு மூட்டைகளை மீட்டதுடன் அமைப்பாளர் மீது கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர். செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் 2 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்  சத்துணவு மையத்தில் இருந்து 2 சத்துணவு மாவு மூட்டைகளை அங்கன்வாடி அமைப்பாளர் அம்புசம் மகன்கள் விற்பனை செய்ய எடுத்து வந்தனர். அப்போது லாதா என்பவர் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

இதையடுத்து நேற்று கலெக்டரிடம் 2 சத்துணவு மாவு மூட்டைகளை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அப்போது அங்கன்வாடி ஊழியர், சத்துணவு மாவை கால்நடை தீவனமாக பல ஆண்டுகளாக விற்று முறைகேடு செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தனர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்ட, வட்ட ஊட்டச்சத்து மைய அலுவலர்கள் சிறுகடம்பூர் மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: