மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புற்களைதேடி அலையும் ஆடு, மாடுகள்

ஆர்.எஸ்.மங்கலம், மே 7: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதி முழுவதும் கடந்த 4 ஆண்டாக மழை இல்லாத காரணத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் வருவாயை இழந்த விவசாயப் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற ஆடுகள் மற்றும் பசு மாடுகளை வளர்த்து வருமானம் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த ஆடு, மாடுகளுக்கு சரியான முறையில் பசும் புற்கள் மற்றும் தீவனங்களை கொடுக்க முடியாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர். வேறு வழி இல்லாமல் வயல்வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விரட்டி அனுப்பி விடுகின்ற கண்மாய், குளம்,குட்டை, வயல்வெளிகள் எங்குமே மேய்ச்சலுக்கு புற்கள் இல்லை. இதனால் ஆடுகளும், மாடுகளும் வயல்வெளிகளில் கருகி சருகாக உள்ள புல், புதர்களை வைக்கோல் போன்றவற்றை தேடி அலைந்து தின்னும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மனிதர்களுக்கு தான் பஞ்சமாக போனது என்றால், கால்நடைகளுக்கும் கூட உணவு பஞ்சம் வந்து விட்டதாக பொதுமக்கள் புலம்பி கண்ணீர் வடிக்கின்றனர்.

Related Stories: