புல்லுக்காட்டுவலசை முப்பிடாதியம்மன் கோயிலில் ேதரோட்டம்

நெல்லை, மே 3:  புல்லுக்காட்டுவலசை முப்பிடாதியம்மன் கோயிலில் சித்திரை ேதரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். புல்லுக்காட்டுவலசை வடக்கு தெருவில் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை புரட்டாசி 2வது செவ்வாய், சித்திரை 3வது செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். புரட்டாசி திருவிழாவில் அம்மன் சப்பர ஊர்வலம், சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 23ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மதிய பூஜை, அன்னதானமும், 29ம் தேதி இரவு 8 மணிக்கு கரகாட்டம்,

குறவன் குறத்தி ஆட்டம் நடந்தது. 30ம் தேதி மதியம் உச்சிக்கால பூஜையை தொடர்ந்து கூழ் ஊற்றும் வைபவம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேேராட்டம் நடைபெற்றது. இரவு முழுவதும் ஊர் சுற்றி தேர் காலை 8 மணிக்கு கோயில் நிலையை சென்றடைந்தது. தேரோட்டத்தில் ஊர் பொதுமக்கள், சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர் நிலையை அடைந்ததும் பெண்களின் முளைப்பாரி ஊர்வலமும், ஊரணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை வடக்குத்தெரு நாட்டாமைகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: