சங்கரன்கோவில், மே 26: தாய்லாந்து நாட்டில் பசிபிக் ஆசியா விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மூன்றாவது பசிபிக் ஏசியன் யோகா, சிலம்பம் போட்டி மே 18,19 ஆகிய தேதியில் நடைபெற்றது. இப்போட்டியில் சங்கரன்கோவில் அருகே கடம்பன்குளம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ், அருள், இன்பராஜ் ஆகியோர் சிரசாசனம், விருச்சிக ஆசனம் செய்து தங்கப்பதக்கம் வென்றனர். அவர்களை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து ராஜா எம்எல்ஏ கூறுகையில், ‘தென்காசி வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த நேரம், எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம். விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலின்படி விளையாட்டு துறையில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும். மாணவ, மாணவிகள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று பதக்கங்களை பெற வேண்டும்’ என்றார்.
The post யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் சங்கரன்கோவில் மாணவர்களுக்கு தங்க பதக்கம் appeared first on Dinakaran.