கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 3:  கணினிமயம் என்ற பெயரில் கிராமிய அஞ்சலகங்களை 10.4.2019 முதல் எந்த பணியும் நடைபெறாமல், கிராமப்பகுதிகளில் தபால் பட்டுவாடா பணி மற்றும் அலுவலக பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்திட மாநில நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம அஞ்சலக பணியாளர்களை தேவையில்லாமல் அலுவலக பணிநேரம் முடிந்த பின்னரும் கணக்கு அலுவலகங்களில் காத்திருக்க வைப்பதை உடனடியாக நிறுத்திட வேண்டும்.  மிகமோசமான நெட்ஒர்க் மற்றும் சர்வர் பிரச்னைகளால் ஏற்படும் பணிமுடக்கத்திற்கு கோட்ட நிர்வாகம் உடனடி மாற்றுவழி ஏற்படுத்திட வேண்டும்.  பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கேட்ட இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் குமரி கோட்டம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகித்தார். இதில் கோட்டப் பொருளாளர் தெய்வசெல்வன், செயலர் சுபாஷ், நிர்வாகிகள் வீரமணி, பொன்னுசாமி, ரவீந்திரன், ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: