எல்லமலை ஊராட்சி ஆரம்ப பள்ளியை நடுநிலை பள்ளியாக மாற்ற கோரிக்கை

கூடலூர், மே. 1:  எல்ல மலை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அனிபா மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மனு அளித்துள்ளார்.

 அந்த மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 2013ம் ஆண்டு முதல் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்து பள்ளியை நடுநிலை பள்ளியாக மாற்ற விண்ணப்பித்து வருகிறோம். அப்போது இப்பள்ளியில் 190 மாணவ மாணவியர் பயின்று வந்தனர். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் கூடலூர் தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளோம். இப்பள்ளியை சுற்றியுள்ள சீபுரம், இந்திரா நகர், சந்தன மலை, கிளன் வன்ஸ், சுபாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொலைதூரத்தில் உள்ள பார்வுட் மேல்நிலை பள்ளிக்கு சென்று வர வேண்டி உள்ளது.

இதனால் மழை காலங்களில் மாணவ மாணவியர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும் எல்லாம் மலை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் மற்றும் பள்ளியின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியை நடுநிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: