சீர்காழி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

சீர்காழி, ஏப்.30: சீர்காழி வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சீர்காழி வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வழக்கறிஞர்கள் சங்க   அலுவலத்தில் நடைபெற்றது. இதில் சீர்காழி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக  ராஜாராமன், செயலாளராக மணிவண்ணன், துணை செயலாளராக சுதா, பொருளாளராக தியாகராஜன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்தலை வழக்கறிஞர்கள்  வீரமணி தியாகராஜன் ஆகியோர் நடத்தினர். வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகளை வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.

Related Stories: