இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மா. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம், ஜூன் 3: இஸ்ரேல். பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க உயர் மட்ட குழு உறுப்பினர் ராம்தாஸ் ஆகியோர் பேசினர்.

கொலைகார இஸ்ரேல் அரசே ரபா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வேண்டும். சுயேட்சையான பாலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும். மோடி அரசே இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சரபோஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஸ்சந்திர போஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இப்ராகிம், மதிமுக நகர செயலாளர் ராஜராஜ சோழன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மா. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: