கெங்கவல்லியில் பள்ளி செல்லா குழந்ைதகள் கணக்கெடுப்பு

கெங்கவல்லி, ஏப்.26: கெங்கவல்லி ஊராட்சியில் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. நேற்று கடம்பூர் பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா, ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன், கடம்பூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம், சிறப்பாசிரியர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று, கணக்கெடுப்பு நடத்தினர். கிராமபுறங்களில் உள்ள சிறுவர்களின் பெற்றோர்களை சந்தித்து, அவர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி, இடைநின்ற குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர்.

Related Stories: