திருச்சி மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் உறுப்பினராக சேர அழைப்பு மே 2ம் தேதி கடைசி

திருச்சி, ஏப்.24:  திருச்சி மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் உறுப்பினராக இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக மே 2ம் தேதி கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாநகராட்சி சார்பில் ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பவதாவது: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட (நடைபாதை வியாபாரிகள், தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள் மற்றும் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்பவர்கள்) அரசாணை எண்.159 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 2.11.2015ன்படி உத்தரவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் உள்ளபடி நகர விற்பனைக்குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு 13 உறுப்பினர்கள் கொண்டதாகும். இந்த குழுவிற்கு வியாபாரிகளின் பிரதிநிதிகளாக 6 உறுப்பினர்கள் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதனிடையில் மேற்கண்ட வியாபாரிகள் சார்பாக உள்ள பல்வேறு சங்கங்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணைகளில் பிறப்பிக்கப்படுள்ள உத்தரவுகள் அடிப்படையில் தற்போதுள்ள வியாபாரிகள் 3,458 உறுப்பினர்கள் கொண்ட பட்டியல் திருச்சி மாநகராட்சியின் நான்கு கோட்ட அலுவலகங்–்களிலும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் விடுபட்டுள்ள (நடை பாதை வியாபாரிகள், தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள் மற்றும் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்பவர்கள்) வியாபாரிகள் தங்்களது பெயர்களை உறுப்பினர் பட்டியலில் இணைத்துக்கொள்ள அவர்களது முழுவிவரங்களுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரத்தினை வரும் மே 2ம் தேதிக்குள் படிவம் IIIஐ பூர்த்தி செய்து உரிய ஆதாரங்களுடன் அந்தந்த மாநகராட்சி கோட்ட உதவி ஆணையர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: