கோடையில் பயறுவகை பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு ஆலோசனை

அரியலூர், ஏப். 24:  அரியலூர் வட்டாரத்தில் தற்போது கோடை உழவுப்பணி நடந்து வருகிறது. தற்போது கோடையில் பாசன வசதி உள்ள இடங்களில் நிலத்தை தரிசாக போடாமல் விவசாயிகள் பயறுவகை பயிர்கள் விதைப்பு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற முடியும். பயிர் பூக்கும்போதும் காய்கள் பிடிக்கும் தருணத்திலும் 2 சதவீத டிஏபி கரைசல் (2 கிராம் டிஏபி 100 மிலி தண்ணீர்) அல்லது பயறு அதிசயம் ஏக்கருக்கு 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம்.

மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு காய் பிடிப்பு அதிகரிக்கும். பயிர் வறட்சியை தாங்கி வளர்வதுடன் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம். மேற்கூறிய தொழில்நுட்பங்களுடன் நீர் நிர்வாகம், களை நீர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகளை கடைபிடித்து கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் அடையலாம். இவ்வாறு அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: