பட்டுக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா

பட்டுக்கோட்டை, ஏப். 24: பட்டுக்கோட்டை மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.பட்டுக்கோட்டை அல்லாகோவில் தெரு பாக்கியம்நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கரகம், பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி, காவடி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. முன்னதாக காசாங்குளம் சிவன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி, காவடி எடுத்து தலைமை தபால் நிலைய சாலை, பெரியகடைத்தெரு, மார்க்கெட் வழியாக அல்லாகோவில் தெரு பாக்கியம்நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: