பொட்டியபுரத்தில் மாரியம்மன் கோயில் விழா

ஓமலூர், ஏப்.23: ஓமலூர் அருகே, பொட்டியபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று கரகம் எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் தாம்பூல தட்டுக்கள் எடுத்து செல்லுதல், முளைப்பாலி எடுத்தல் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு அக்னி கரகம், பூங்கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், விமான அலகு, நாக்கு அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து உற்சவர் மாரியம்மன், சத்தாபரணத்தில் பல்வகை மலர்களால் ஜோடிக்கப்பட்டு ஊர்வலம் கொண்டு வரப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: