வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கோபி, ஏப். 23:  கோபி ஸ்ரீவெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை அமைச்சர் பாராட்டினார்.   கோபி அருகே தாசம்பாளையத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 297 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு மாணவர்கள் 600க்கு 577 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 500க்கு மேல் 45 மாணவர்களும், 450க்கு மேல் 102 மாணவர்களும், 400க்கு மேல் 175 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் 97க்கு மேல் 2 பேரும், 95க்கு மேல் 6 பேரும், 90க்கு மேல் 13 பேரும், 85க்கு மேல் 28 பேரும், 80க்கு மேல் 48 மாணவர்களும் பெற்றுள்ளனர். 15வது ஆண்டாக மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடதக்தது.  இந்நிகழ்ச்சியில் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பள்ளி செயலாளர் கெட்டிமுத்து ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியின் போது  இயக்குநர்கள் முருகுசாமி ஜோதிலிங்கம், ராசு மற்றும் இயக்குநர்கள் உடனிருந்தனர்..

Related Stories: