இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு

திருச்சி, ஏப்.23:  இலங்கையில் அடுத்தடுத்து  நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் ஏர்போர்ட், ரயில் நிலையம், தேவாலயங்கள், மசூதி, கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றுமுன்தினம் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 290க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனால், இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்புபோடப்பட்டு மோப்பநாய் மூலம் சோதனையிடப்பட்டு வருகிறது. முக்கிய கோயில்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Advertising
Advertising

திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுபாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருச்சி ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரங்கம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோயில்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்திய பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related Stories: