லால்குடி அருகே புறவழி சாலைஅமைக்கும் பணி பழங்காலத்து மண்டபம் இடித்து அகற்றம்

லால்குடி, ஏப்.23: லால்குடி அருகே திருச்சி - சிதம்பரம்  புறவழி சாலை அமைக்கும் பணிக்காக 300  ஆண்டுகளுக்கு  முன்னதாக கட்டப்பட்ட பழமையான மண்டபம் இடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதிய மண்டபம் கட்ட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள்னர்.திருச்சியிலிருந்து சிதம்பரம் வரை  தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிசாலை அமைக்கும் பணி  கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையில் உள்ள குடியிருப்பு வீடுகள்  இடிக்கப்பட்டது.  மேலும் சாலையில் இரு புறங்களிலும் உள்ள பெருவளநல்லூர், வெள்ளனூர், புள்ளம்பாடி, ஆரோக்கியபுரம், வடுகர்பேட்டை, கல்லக்குடி, கல்லகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பழமையான புளிய மரங்கள்   உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிழல் இல்லாததால் தற்போது கடுமையான  வெய்யிலின் உஷ்ணத்தால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர் லால்குடி அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் பெருவளநல்லூர்  கிராமத்தில்  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு  சோழ காலத்து அரசர்கள்,  சாணக்கியர் காலங்களில் வெளியூர் செல்பவர்கள் மற்றும் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கி இளைப்பாறி செல்ல கருங்கற்களால் அமைக்கப்பட்டிருந்த மண்டபம்  இருந்து வந்தத. பழங்காலத்து இந்த இடம்  பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் பெருவளநல்லூர் மண்டபம் பஸ் ஸ்டாப் என  அழைக்கப்பட்டு வந்தது.

Advertising
Advertising

தற்போது புறவழி சாலை அமைக்கப்படுவதையொட்டி இந்த பழங்கால மண்டபம் பொக்லைன் இயந்திரம் மூலம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கத்துக்கு குறிப்பிட்ட தூரம் வரை மரங்கள்  வெட்டப்பட்டது. ஆனால் இதுவரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வெட்டிய மரங் களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நட முன்வரவில்லை. தற்போது 100 க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்தவுடன் சாலையின் இருபுறங்களிலும் புதிய மரக்கன்றுகள் நட வேண்டும். மேலும் பழங்காலத்து சின்னமாக விளங்கிய பெருவளநல்லூர் மண்டபம் இடிக்கப்பட்டது.  மண்டபம் நினைவாக பாதசாரிகள் ஓய்வெடுத்து செல்ல புதிய மண்டபம் டபம் கட்ட  தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன் வரவேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: