சுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு

தா.பேட்டை , ஏப்.23:  தா. பேட்டை  பிள்ளாதுறையில் உள்ள நாராயண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது .அதனைத் தொடர்ந்து நாராயணசுவாமி பரிவார தெய்வங்களுடன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு பொன்னர் சங்கர் கதை படிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து மழை வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: