திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்

திருச்சி, ஏப்.23:  திருச்சி பெரியார் ஈவெ ரா கல்லூரியில் நேற்று பி.ஏ., பி.எஸ்சி, பி.காம் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் ஜூலி மாணவ, மாணவிகளுக்கு நேற்று வழங்கினார். இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நேற்று வந்து விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் ஜூலி கூறுகையில்.
Advertising
Advertising

பிஏ, பிஎஸ்சி,  பிகாம் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் படிவங்கள் 22.4.2019 அன்று முதல் 3.5.2019 அன்று வரை வினியோகிக்கப்படுகிறது. வருகிற 6.5 2019 அன்று பிகாம் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பி.எஸ்சி அறிவியல் துறை சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 7.5. 2019 அன்றும், பி.ஏ மற்றும் பி.எஸ்சி விஸ்காம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 9.5 2019 அன்று கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகள் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் பெற்றோருடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நேற்று மட்டும் 1,237 விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்லூரி முதல்வர் ஜுலி தெரிவித்தார்.

Related Stories: