கடன் தொல்லையால் சமையலர் தற்கொலை

கும்பகோணம், ஏப். 23: கும்பகோணம் அருகே நேதாஜி நகர் துவரங்குறிச்சி தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (40). சமையல்காரர். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஜெய்சங்கரின் மனைவி முத்துலட்சுமி, தனது அண்ணன் வீட்டு விசேஷத்துக்கு தனது குழந்தைகளுடன் சென்றார்.அப்போது ஜெய்சங்கரை நிகழ்ச்சிக்கு வருமாறு முத்துலட்சுமி அழைத்துள்ளார். அதற்கு நீங்கள் செல்லுங்கள், நான் பின்னாடியே வருகிறேன் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதனால் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் சென்றார். ஆனால் தனது கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் முத்துலட்சுமி தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் ஜெய்சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் ெசய்தார். அதில் கடன் தொல்லையால் ஜெய்சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: