சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பேரிகார்டு அமைப்பதால் போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம், ஏப்.23: ராமநாதபுரம் சென்டர் பிளாக் பகுதியில் போலீசார் தடுப்பு வேலி போட்டு சாலையை அடைத்தால், நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிபட்டனர்.ராமநாதபுரம் அரண்மனை, பெரிய பஜார், அக்ரஹாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு சாலைகளில் காலை, மாலை என இரவு 9 மணி வரை நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான புதிய வாகனங்கள வருகின்றன. மக்கள் தொகை அதிகமான நிலையில் அதற்கேற்ற வாகனங்களும் அதிகமாகி கொண்டே போகிறது.இந்நிலையில் சென்டர் பிளாக் பகுதியிலிருந்து அரண்மனை செல்லும் சாலையை மட்டும் ஒருவழி பாதையாக மாற்றி பேரிகார்டுகளை வைத்து சாலையை மறைத்தனர். இதனால் கேணிக்ரை வண்டிக்காரத் தெரு சாலைத் தெரு வழியாக அரண்மனை வழியாக பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர்.

சாலை தெரு, பெரிய பஜார் அரண்மனை பகுதியில் அதிகளவிலான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளது. 60 அடி அகலமான சாலையில் ஒரு வாகனம் கூட செல்ல முடியவில்லை. காலை நேரத்தில் மீன் மார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் பள்ளி கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் தினமும் திணறுகின்றன. போலீசாரின் நடவடிக்கையால் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிபட்டனர்.சாலையின் இருபுறங்களிலும் டூவிலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் நடந்து செல்லக் கூட முடியாமல் திணறினர். எவ்வளவு மக்கள் அவதிப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் கவலைபடாமல் போலீசார் அவ்வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒருவழி பாதை என ஒரு சாலையை மட்டும் தடுப்புகளை அமைத்துள்ளதால் நேற்று காலை முதல் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

எதிர் எதிரே வாகனங்கள் வந்து காதை செவிடாக்கும் வகையில் போட்டி போட்டு ஹாரன்கள் அடித்தன. ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள், மக்கள் நடந்து செல்ல நடைபாதை இல்லாத நிலையில் அனைத்து வாகனங்களும், நடந்து செல்பவர்களும் ஒரே ரோட்டில்தான் செல்ல வேண்டும். இந்த நான்கு சாலைகளிலும் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையில் தடுப்பு அமைத்தால் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலிலும் கொதித்தெழுந்தனர்.டூவிலரில் செல்பவர்கள் கூறுகையில், ராமநாதபுரத்திற்கு மையப்பகுதியாக பெரியபஜார் அரண்மனை உள்ளது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள நிலையில் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பலசரக்கு சாமான்கள் காய்கறிகள் வாங்க மக்கள் வருகின்றனர். அரண்மனை பகுதியில் உள்ள சாலையோர காய்கறி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி தரலாம். பிள்ளையார் கோயில், சென்டர் பிளாக் பகுதியில் 10 அடி அகலத்தை குறைக்கும் வகையில் இரண்டு பக்கங்களிலும் மின்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாப்பை வேறு இடத்திற்கு மாற்றியும், சென்டர் பிளாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் நடுவே வெள்ளை கோடுகள் போட்டு வாகனங்களை அனுமதிக்கலாம். மற்ற நகரங்களை போல் வாகனங்கள் அதிகளவில் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து ஓழுங்கு படுத்தினாலே டிராபிக் ஜாம் ஏற்படாது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் சாலையோர கடைகளில் வசூல் செய்து கொண்டு வாகனங்களில் செல்பவர்களை குறை சொல்கின்றனர் என்றார்.

Related Stories: