கும்பகோணம் அருகே பைக்கை நகர்த்தி வைத்ததால் தகராறு இருதரப்பினர் மோதலில் 6 பேர் காயம்

கும்பகோணம், ஏப். 22: கும்பகோணம் அருகே பைக்கை நகர்த்தி வைத்ததால் இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.கும்பகோணம் அடுத்த நீலத்தநல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று முன்தினம் வாக்களிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார், அவரது நண்பர்கள் சுபாஷ் சந்திரபோஸ், பிரதீப், பிரபாகரன், திலீப் ஆகியோர் 3 பைக்குகளில் அரசு பள்ளிக்கு சென்றனர். அப்போது சாலையில் பாமகவை சேர்ந்தவர்கள் தங்களது பைக்குகளை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்தனர். இதனால் ராம்குமார் மற்றும் அதன் நண்பர்கள் சேர்ந்து அந்த பைக்கை சாலையோரமாக நகர்த்தி வைத்தனர். பின்னர் 5 பேரும் வாக்களித்து விட்டு வெளியில் வரும்போது பைக்கின் உரிமையாளரான பாமகவை சேர்ந்தவர் தகராறு செய்தார். அப்போது இருதப்பினரையும் பொதுமக்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Advertising
Advertising

பின்னர் ராம்குமார் மற்றும் அவரது நண்பர்கள், நீலத்தநல்லூர் உள்ள பெட்ரோல் பங்கில்  தங்களது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றனர். ஆனால் ஆத்திரமடைந்த பாமகவினர் 50க்கும் மேற்பட்டோர் வந்து அவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இந்த சம்பவத்தில் தனவள்ளி உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சிகிச்சகை–்காக 6 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து ராம்குமார் உட்பட 6 பேர், சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: