பிளஸ் 2 தேர்வில் சரிவு 16வது இடம் பிடித்த ராமநாதபுரம்

தொண்டி, ஏப்.21: பிளஸ்2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பிடித்து. இது இப்பகுதி மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வறட்சி மாவட்டத்தில் கல்வியாவது உள்ளதே என பெருமை பட்டனர். அப்போதைய கலெக்டர்கள் கல்வி துறையில் கூடுதல் கவனம் செலுத்தி தலைமை ஆசிரியர்களிடம் அவ்வப்போது கல்வியின் தரத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டனர். தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளிகளில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.ஆனால் கடந்த கல்வி ஆண்டில் மாவட்ட கல்வி அலுவலர் கல்வியின் தரத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆசிரியர்களிடம் விரோத போக்கில் நடந்து கொண்டதாக தெரிகிறது. மாணவர்களின் கல்வி திறன் உயர எவ்வகையில் வழி செய்ய வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் ஆசிரியர்களின் போராட்டம் வேறு. மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில் கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக அதிகாரிகள் நடந்துகொண்டதால், இம்முறை 16வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டது மாணவர்கள் மட்டுமே. இம்முறை தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன் கூறியது, ‘‘மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியர்களிடம் விரோத போக்கையே கடைபிடித்தார். தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை கொடுப்பது. மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க எவ்விதத்திலும் உதவாது. முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் கல்வி திறன் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்காமல் இருந்ததே இந்நிலைக்கு காரணம். மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

Related Stories: