15 இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

ஈரோடு, ஏப்.19: ஈரோடு  மக்களவை தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 912 மையங்களில் 2,213  வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில், நேற்று காலை 6 மணிக்கு மாதிரி  வாக்குப்பதிவு துவங்கியது. பின்னர் காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு  துவங்கியது. மாவட்டத்தில் ஈரோடு தொகுதியில் ஈரோடு மாநகராட்சி பகுதியில்  சிஎஸ்ஐ பள்ளி, வீரப்பன் சத்திரம் பள்ளி, டீச்சர்ஸ் காலனி பள்ளி ஆகிய 3  இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரம்  தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. இதேபோல், மாவட்டம் முழுவதும் 15  இடங்களிலும் வாக்குப்பதிவு  தாமதமாக துவங்கியதாக கலெக்டர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: