துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவு வரை வந்தது வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு

திருச்சி, ஏப்.19: திருச்சி மக்களை தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டது. துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மக்களை தொகுதியில் திருச்சி  கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை என மொத்தம் 6 தொகுதிகள் இருக்கிறது. இதில் மொத்தம் 1660 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து திருச்சி மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணும் மையம் திருச்சி சாரநாதன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியானது நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அதிகாலை வரை வந்த வாக்கு பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதிவாரியாக அறைகளில் அடுக்கிவைக்கப்பட்டது. அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இது தவிர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: