திருவானைக்காவல் பள்ளி வாக்குச்சாவடியில் அடையாள மை வைத்த பெண் அலுவலருக்கு திடீர் மாரடைப்பு

திருச்சி, ஏப்.19:  திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.  இங்குள்ள 142ம் எண் வாக்கு மையத்தில் முசிறி அரசு பள்ளியில் கிளார்க்காக பணியாற்றும் ராஜேஸ்வரி (52) பி 3 அலுவலராக பணியாற்றி வந்தார். அதாவது வாக்காளரின் பெயரை படித்து, அவரது விரலில் மை வைக்கும் பணியை செய்து வந்தார். இதில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த நிலையில், காலை 11.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ராஜேஸ்வரி மயங்கினார். உடனே அவரை அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் 142ம் எண் பூத்தில் சுமார் 10 நிமிடம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் மற்ற அலுவலர்களை கொண்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

Advertising
Advertising

Related Stories: