ஜனநாயக கடமை நிறைவேற்றிய மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்

கமுதியில் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கலா விருத்தி மேல்நிலைப்பள்ளி, கெளர செட்டியார் உயர்நிலைப் பள்ளி, இக்பால் நடுநிலைப் பள்ளி, கண்ணார்பட்டி, கோட்டை மேடு ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் மக்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். கீழக்கரையில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் காலை 6 மணியிலிருந்து கூட்டம் கூட்டமாக வாக்காளர்கள் குவிய துவங்கினர். பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. வயதான மூதாட்டிகள் உறவினர்கள் உதவியோடு வாக்களித்தனர். கீழக்கரையில் 98வயது மூதாட்டி முத்து ஆமீனா உறவினர்களுடன் வந்து வாக்களித்தார். தொண்டி மற்றும் சுற்றுவட்டார பொது மக்கள் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்தனர். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள் கூட தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே செய்தனர். தொண்டியில் 95 வது பூத்தில் வாக்கு இயந்திரம் திடீரென பழுதாகியது. இதனால் வாக்காளர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. சுமார் 20 நிமிடம் வாக்கு பதிவு தடை ஏற்பட்டது. அதிகாரிகள் சரி செய்ததால் மீண்டும் வாக்குபதிவு துவங்கியது.

Related Stories: