பூதங்குடி ராமசுவாமி கோயிலில் தேரோட்டம்

பாபநாசம், ஏப்.18: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகேயுள்ள பூதங்குடி வல்வில் ராமஸ்வாமி சன்னிதி பிரஹ்மோத்ஸவத்தை முன்னிட்டு கடந்த 5ம்தேதி  த்வாஜா ரோகணம் நடைபெற்றது. 6ம் தேதி தொடங்கி தினமும் சூர்ய பிரபை, பிரஸித்த சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், புன்னை மரவாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட  வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 46 வது பட்ட அஹோபில மட ஜீயர் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலைக்கு வந்தது.

Advertising
Advertising

Related Stories: