ஏற்பாடுகள் தீவிரம் பராமரிப்பு இல்லாததால் பாழாகும் போலீஸ் குடியிருப்பு

திண்டுக்கல், ஏப். 18: திண்டுக்கல் போலீசார் குடியிருப்பு  கட்டடங்களில் பராமரிப்பு இல்லாததால் மீண்டும் செடிகள் முளைத்து வருகின்றன. திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே போலீசாருக்கு பழைய குடியிருப்புகள் இருந்தன. இவை சிதிலமடைந்து, ஓடுகள் பெயர்ந்து விழுந்தன. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் மூலம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. தற்போது பழைய கட்டடங்கள் இடிக்கப்படாததால் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், பாம்பு உட்பட பல விஷஜந்துகளும் உலா வருகின்றன. இந்நிலையில் புதிய கட்டடத்தில் குடியேறிய போலீசார் தங்கள் கட்டடங்களில் முளைத்துள்ள செடிகளை கூட அகற்ற மறுக்கின்றனர். அரசு கட்டடம் தானே, பொதுப்பணித்துறையினர் வந்து அகற்றி கொள்ளட்டும் என பிடிவாதம் பிடிக்கின்றனர். நாம் இருக்கும் வரைக்கும் நமது கட்டடம் என்ற உணர்வுடன் செடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அகற்றினால் மட்டுமே கட்டடங்கள் சிதிலமடைவது தவிர்க்கப்படும். நீண்ட நாட்களுக்கு கட்டடங்கள் தங்கள் வாழ்நாளை நீட்டிக்க வாய்ப்புள்ளது என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: