கொடுமுடி விற்பனை கூடத்தில் ரூ.43 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை

கொடுமுடி, ஏப்.17:  கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.43 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனையானது. 20,528 தேங்காய் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 751க்கு விற்பனையானது.  8880 கிலோ கொப்பரை ரூ.8 லட்சத்து ஆயிரத்து 172க்கு விற்பனையானது. இதில், முதல் தரம் அதிகபட்சமாக ரூ.100.25க்கும், குறைந்த பட்சமாக ரூ.94.75க்கும், 2ம் தரம் அதிகபட்சமாக ரூ.95.75க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.25க்கும் விற்பனையானது.28,828 கிலோ எள் ரூ.33 லட்சத்து 82 ஆயிரத்து 751க்கு விற்றது. இதில், சிவப்பு ரக எள் அதிகபட்சமாக கிலோ ரூ.124.69க்கும், குறைந்தபட்சமாக ரூ.103.99க்கும், கருப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.139.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.112.10க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.43 லட்சத்து 38 ஆயிரத்து 623க்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனையானது.

Advertising
Advertising

Related Stories: