தேர்தல் நாளை நடக்க உள்ளதால் ஈரோட்டில் இன்று மாட்டுச்சந்தை

ஈரோடு, ஏப். 17:  ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்கி செல்வர். இந்நிலையில் நாளை (வியாழன்) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடப்பதால் மாட்டுச்சந்தை ஒரு நாள் முன்னதாக இன்று (17ம் தேதி) நடக்கிறது.மாட்டுசந்தை மேலாளர் முருகன் கூறுகையில்,`நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை மாட்டு சந்தை கூட உள்ளது. சந்தை குறித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இன்று கூடும் சந்தையில் வழக்கம் போல் விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: